Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெலுங்கானாவில் விமான விபத்து: உயிர் தப்பிய விமானி!

In இந்தியா
Published: 05:16 GMT, Nov 25, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Vithushagan
hj-1

தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட  இராணுவ விமானம் ஒன்று  விபத்துக்குள்ளானதில், விமானத்தை செலுத்திய பெண் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கமான பயிற்சியில் ஐ.ஏ.எப் கிரண் விமானம் ஈடுபட்டு வந்தது.

திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானமானது கீழே விழுந்தது. இதனையடுத்து, உடனியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் பயிற்சியில் ஈடுபட்ட பெண் விமானியை பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பு விமானமான ஐ.ஏ.எப் கிரண், இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg