Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதியைப் புனரமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Published: 05:12 GMT, Nov 25, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Ravivarman

அம்பகமுவ பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட போட்றி, எலிபடை, மற்றும் அயரபி தோட்ட மக்கள் வீதியைப் புனரமைக்குமாறு கோரி இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் அயரபி சந்தியில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

நோர்வூட் அயரபி சந்தியிலிருந்து எலிபடை தோட்டப்பகுதிக்கு செல்லும் சுமார் 5 கிலோ மீற்றர் பிரதான வீதி பல வருடகாலமாக பாவனைக்குத நிலையில் காணப்படுகின்றது.

இப்பிரதான வீதியின் ஊடாகப் பயணிக்கும் இத்தோட்ட பிரிவை சேர்ந்த 1000 குடும்பங்களைச் சார்ந்த மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதைக் குறிப்பிட்டே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நிரந்தர வீதியே எமது கோரிக்கை, தெற்கிற்கு அதிவேகம், எமக்கு ஆமை வேகம், போன்ற கோசங்களை எழுப்பியதுடன் வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

பல வருடகாலமாக இந்த வீதியை சீர்திருத்தி தருமாறு இப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் ஒரு தீர்வினையும் பெற்றுத்தராத நிலையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

DSC09863 DSC09855 DSC09853 DSC09852 DSC09846 DSC09843

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg