Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி, பதவியை துறந்தால் நானும் துறப்பேன் – லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன

In
Updated: 07:25 GMT, Nov 25, 2017 | Published: 05:20 GMT, Nov 25, 2017 |
0 Comments
1237
icon_com
This post was written by : Arul Jesu
lux

ஊழலுக்கு எதிராக செயற்பட தமது பதவியை துறக்க ஜனாதிபதி தீர்மானித்தால், தானும் அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்யத்தயார் என இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதால் ஜனாதிபதி மீது அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்கள் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியானாலும், சுதந்திரக்கட்சியானாலும் நல்லாட்சியின் கொள்கைகளை மதித்து செயற்பட  அர்ப்பணிப்புடன்    செயற்பட வேண்டும் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

இலஞ்சம், ஊழலுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்கும் போது அதற்கு எதிராக தம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் பொது மக்களுடன் இணைந்து செயற்பட தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நிக்கவரெட்டிய பகுதியில் வைத்து தெரிவித்திருந்தார்.

அவ்வாறு செயற்படுவதற்கு தமது அதிகாரம் தடையாக அமைந்தால் அதனையும் களைந்து, தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தவறிழைத்தன் காரணமாகவே 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் தோல்வியடைந்தாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோல் அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் அவ்வாறு தவறிழைத்தால், அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் கூறியிருந்தார்.

pre

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg