Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலி அரசாங்கத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: துரை முருகன்

In இந்தியா
Published: 06:55 GMT, Nov 25, 2017 |
0 Comments
1060
icon_com
This post was written by : Vithushagan

நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தேர்தலில் போலி அரசாங்கத்துக்கு  மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை அரசு பாடசாலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. விற்கு வழங்கிய மறுநாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திகதியை அறிவித்ததில் உள்நோக்கம் உள்ளது என்று மக்களே நினைக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் யார் அடுத்த முதல்வர் என்ற கேள்வி உள்ளது. அ.தி.மு.க.வை மக்கள் தூக்கி எறிவார்கள். புதிய திருப்பம், புதிய மறுமலர்ச்சி, புதிய கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த வல்லமை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்கனவே எங்களோடு உள்ள தோழமை கட்சிகளை தொடர்பு கொள்வோம்.

இந்த தேர்தலில் எங்களுக்கு இருந்த ஒரே எதிரி கட்சி அ.தி.மு.க. தான். அக்கட்சியினர் தற்போது இரண்டாகி இருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி வாக்காளர்களை நீக்கியதுபோல், போலி அரசாங்கத்தையும் மக்கள் நீக்குவார்கள். இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg