Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்ஜென்டின நீர்மூழ்கிக்கப்பல் மாயம்: தீவிர விசாரணைக்கு உத்தரவு

In உலகம்
Published: 07:01 GMT, Nov 25, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Suganthini

தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் 44 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு கடற்படை அதிகாரிகளுக்கு, ஆர்ஜென்டின ஜனாதிபதி மொரிசியோ மாக்ரி  (Mauricio Macri )  உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ஜென்டின கடற்படையினரின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் உதவியுடன் இந்தக் கப்பலை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் காணாமல் போன இந்தக் கப்பல் தொடர்பாக சாதகமான பதில் கிடைக்குமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆர்ஜென்டினக் கடற்படையினருக்குச் சொந்தமான ‘சன் குவான்’ எனும் நீர்மூழ்கிக்கப்பல், தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த 15ஆம் திகதி திடீரென்று காணாமல் போயுள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பலைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் ஆர்ஜென்டினக் கடற்படையினருடன் இணைந்து பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், இந்தக் கப்பல் தொடர்பாக இதுவரையில் எதுவித தகவலும் வெளிவராத நிலையில், கப்பலிலிருந்த 44 பேரின் நிலைமை என்னவென்று தெரியாத நிலையிலுள்ளது.

இதற்கிடையில், இந்தக் கப்பல் காணாமல் போன தினத்தன்று கப்பல் பயணித்துக்கொண்டிருந்த பகுதியில்   வெடிப்புச் சத்தம் கேட்டதாக கடந்த வியாழக்கிழமை கடற்படையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg