Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உழவு இயந்திரத்தினால் மோதிக்கொலை: சாரதி கைது!

In இலங்கை
Updated: 07:24 GMT, Nov 25, 2017 | Published: 07:13 GMT, Nov 25, 2017 |
0 Comments
1400
icon_com
This post was written by : Ravivarman
murder2_647_071417083415

யாழ்.பருத்தித்துறையில் உழவு இயந்திரத்தினால் மோதிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை முதலாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிதம்பரப்பிள்ளை சிவபாலன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பேக்கரி உரிமையாளரான கொலை செய்யப்பட்டவர் தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராற்றின் பின்னர், அவர் அங்கிருந்து சென்ற சமயம், சந்தேக நபர் உழவு இயந்திரத்தினால் மோதிக்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்தில் சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg