Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினைச் சீரமைக்குமாறு வேண்டுகோள்!

In இலங்கை
Updated: 09:59 GMT, Nov 26, 2017 | Published: 09:59 GMT, Nov 26, 2017 |
0 Comments
1189
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகள், முகத்துவாரப் பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் மோதிச் சேதமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கவென்று செல்லும் 350 மீன்பிடிப் படகுகள் காணப்படுவதாகவும், ஒரு படகுக்கு மாதாந்தக் கட்டணமாக 900 ரூபாய், துறைமுகத்துக்குச் செலுத்துவதாகவும் உரிய முறையில் பணம் அறவிடும் நிர்வாகம் மீனவர்கள் பிரச்சினைத் தொடர்பில் கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாக மீனவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க, முகத்துவார வழியினூடாக செல்லும் போது, படகுகள் பாறைகளில் மோதிச் சேதமடைகின்றன. இது ஆற்றில் நீர் அதிகரிக்கும் காலங்களில் அதிகமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இவ்வருடத்தில் மட்டும் இருபது படகுகள் சேதமடைந்துள்ளதுடன், பாரிய சேதங்களுக்கு, காப்புறுதிப் பணம் வழங்குவதாகவும், பகுதியளவு சேதங்களுக்கு காப்புறுதி பணம் கிடைப்பதில்லை என்றும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

எனினும் இது தொடர்பாக பல தடவை மீன்பிடி அமைச்சருக்கும், அது தொடர்பான அதிகாரிகளுக்கும் தெரிவித்திருந்தும் இதுவரைவில் எங்களது பிரச்சினைக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியான நடவடிக்கை மேற்கொண்டு மீனவர்களின் படகுகள் சேதமடைவதைத் தடுப்பதற்கு உதவுமாறு பாதிக்கப்பட்ட மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

08 05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg