Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் எழுச்சி கொள்கிறது

In இலங்கை
Updated: 09:58 GMT, Nov 26, 2017 | Published: 09:58 GMT, Nov 26, 2017 |
0 Comments
1438
This post was written by : Varothayan

வாகரை – கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் நாளை (திங்கட்கிழமை) மாவீரர் தினத்தை முன்னெடுப்பதற்காக சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொட்டும் மழையின் மத்தியிலும் அங்கு கூடிய மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1500 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட கண்டலடி துயிலுமில்லம், கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இராணுவத்தினரால் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வருடம் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுப்பதற்காக பெரும் சிரமதான பணிகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

20171126_124826 20171126_124900 20171126_124918 20171126_125052

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg