Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

In இலங்கை
Updated: 05:18 GMT, Nov 27, 2017 | Published: 05:18 GMT, Nov 27, 2017 |
0 Comments
1112
This post was written by : Varothayan

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தலவாக்கலை ஹொலிரூட் பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரில் இருவர் பாய்ந்து தப்பியுள்ளதாகவும், மற்றுமொருவர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதோடு, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC09947 DSC09944

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg