Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரசுக்குள் மோதல்! – தொண்டர்களே அலுவலகத்தை நொறுக்கியதால் பரபரப்பு

In இந்தியா
Updated: 08:50 GMT, Nov 27, 2017 | Published: 07:05 GMT, Nov 27, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Puvanes
fight001

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தினை அக்கட்சியின் தொண்டர்களே அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

குறித்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக காலக்கெடு இன்றுடன் நிறைவுக்கு வரவுள்ளது. எனினும் 20 இற்கும் அதிகமான இடங்களுக்கான வேட்பாளர்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலை தொடருகின்றது.

அதேபோன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கிய விடயத்திலும் காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சை நிலைமையை தோற்றுவித்திருந்தது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த தொண்டர்கள் நேற்றிரவு காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் ரேகாபென் சவுத்ரி தனதுபதவியை இராஜினாமா செய்துள்ள விடயமும் அக்கட்சிக்குள் உட்பூசல்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அக்கட்சியின் தொண்டர்களே கட்சி அலுவலகத்தை நொறுக்கியுள்ள விடயம் அக்கட்சிக்குள் உள்ள ஒற்றுமையை கேள்விக்குறியாக்கிவிட்டது.

இதன் காரணமாக சொற்ப இடங்களிலும் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் பெற்றுக்கொள்வதில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg