Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் 2 சரக்குக்கப்பல்கள் விபத்து: 13 மாலுமிகள் மாயம்

In
Updated: 04:50 GMT, Nov 28, 2017 | Published: 04:50 GMT, Nov 28, 2017 |
0 Comments
1383
This post was written by : Suganthini

தெற்கு சீனாவில் இரண்டு சரக்குக் கப்பல்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில், 12 மாலுமிகள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு சீனாவில் பேர்ல் ஆற்றிலேயே (Pearl River)   நேற்று (திங்கட்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இரண்டு கப்பல்களும் விபத்துக்குள்ளானத்தைத் தொடர்ந்து, அவற்றிலொன்று நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, மற்றைய கப்பல் ஒருவாறு கரையைச் சென்றடைந்துள்ளது.

இந்த விபத்தின்போது, 12 மாலுமிகள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். இதேவேளை, இரண்டு கப்பல்களிலும் பயணித்த 13 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

30 படகுகள் மற்றும் ஹெலிகொப்டரின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கையில், கரையோர காவல் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg