Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிமாவட்டங்களுக்கான அரச பேரூந்து சேவைகள் பாதிப்பு- மக்கள் சிரமம்

In இலங்கை
Updated: 06:56 GMT, Nov 28, 2017 | Published: 06:56 GMT, Nov 28, 2017 |
0 Comments
1172
This post was written by : Elakkiya

வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரச பேரூந்துகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சாலை முகாமையாளர் ஏ.ஜே லம்பேர்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சேவையை ஆரம்பிக்கவேண்டிய பத்து பேரூந்துகள் இன்றைய பணிப்புறக்கணிப்பு காரணமாக சேவையை நடைமுறைப்படுத்தாத நிலையில் பயணிகள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான உள்ளூர் சேவைகள் வழமைபோன்று இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்க வெளிமாவட்டங்களுக்கான சேவைகளை வழங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்ட போது, வெளிமாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடுத்துவதற்கு தகுந்த மாற்றுப் பேரூந்துகள் இல்லை என்றும் அதனால் குறித்த சேவையை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg