Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனவுகளுக்கும் ஆத்மாக்களுக்கும் உள்ள தொடர்பு! – இறந்தவர் அருகில் இருப்பாரா?

In அறிவியல்
Updated: 08:41 GMT, Mar 3, 2018 | Published: 11:03 GMT, Nov 28, 2017 |
0 Comments
1763
This post was written by : Puvanes

இன்றுவரை அறிவியல் புரிதல் இல்லாததும், விஞ்ஞானத்தின் மூலம் முறையான விளக்கம் கூறமுடியாத விடயமுமாக காணப்படும் கனவு தொடர்பில் புதிய தகவல்களை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கனவு என்பது பண்டைய காலத்தில் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கும் விடயமாக காணப்பட்டு வந்தது. தெய்வ நம்பிக்கைக்கு உட்படுத்தப்பட்ட விடயங்களில் ஒன்றாக பண்டைய காலத்தில் கனவு விளக்கப்பட்டது.

புராணக்கதைகளிலும், வரலாற்றுப் பதிவுகளிலும் கனவு தொடர்பில் பல்வேறுபட்ட விளக்கங்கள் கூறப்பட்டாலும் அறிவியல் பூர்வமான விளக்கங்கள் இன்று வரையிலும் கூறப்படவில்லை.

எனினும் இது தொடர்பில் நீண்டநாள் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கனவுகள் எண்ணங்களின் பயணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எண்ணங்கள் எனப்படுபவை பிரபஞ்சத்தில் பயணிக்கக் கூடியவை, அத்தோடு அலைவரிசைத் தாக்கத்தையும் எண்ணங்கள் ஏற்படுத்தக் கூடும் என நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஆழ்மனத்தின் தாக்கமே கனவுகளாக வெளிப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி கனவுகள் எதிர்காலத்தை உணர்த்துபவை, கடந்தகாலத்தை மீட்டுபவை, ஆபத்தை அறிவிப்பவை போன்றவற்றுடன் தொடர்புடையவை எனக்கூறப்படுகின்றது.

அதேபோல கனவு தொடர்பில் வேறுவகையில் ஆய்வு செய்யும் சிலர் கனவுகளுக்கும் இறந்த ஆத்மாக்களுக்கும் தொடர்புகள் உண்டு என்றும் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது உறக்கத்தின் போது அல்லது உறக்கத்தில் இருந்து திடீரென விழிக்கும் போதும் அருகில் ஒருவர் இருப்பது போன்ற தோற்றம் (எண்ணம்) ஏற்படும். இது ஆத்மாக்களின் செயற்பாடு எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஒருவர் இறந்த பின்னர் எண்ணங்களாக பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கும் ஆத்மா அதற்கு பிடித்த ஒருவருடன் பயணிக்கும். இதன் காரணமாகவே எதிர்காலத்தை அல்லது இறந்தகாலத்தை உணர்த்தும் கனவுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயிலும் அறிவியல் பூர்வமாக அவை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கனவு என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கங்களுக்குள்லேயே இவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg