Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா எச்சரிக்கை

In
Published: 04:02 GMT, Nov 29, 2017 |
0 Comments
1462
This post was written by : Suganthini

வடகொரியா மிகவும் உயரமாகக் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியுள்ளதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எச்சரித்துள்ளார்.

வடகொரியாவால் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏவப்பட்ட ஏவுகணை, ஜப்பான் கடற்பரப்பில் சென்று விழுந்துள்ளது. 4 ஆயிரத்து 500 கிலோமீற்றர் உயரத்தில் 960 கிலோமீற்றர் தூரத்துக்கு பறந்ததாகத் தென்கொரியா தெரிவித்துள்ளது.

தற்போதைய ஏவுகணைச் சோதனையானது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத் தடைக்கு மத்தியிலும் ஏவுகணைச் செயற்பாடுகளை வளர்க்கும் நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டு வருவதுடன், ஒருபோதும் அணுவாயுதச் செயற்பாடுகளை கைவிடப் போவதில்லையெனவும் வடகொரியா தெரிவித்திருந்தது.

கடந்த செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி அணுவாயுதச் சோதனையை நடத்திய வடகொரியாது, அதனைத் தொடர்ந்து மற்றுமொரு ஏவுகணைச் சோதனையையும் நடத்தியிருந்தது. இதனையடுத்தே, வடகொரியா மீது  ஐ.நா. பாதுகாப்புச் சபையால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

us
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg