Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்: மஹிந்த சமரசிங்க

In இலங்கை
Updated: 06:58 GMT, Nov 29, 2017 | Published: 06:46 GMT, Nov 29, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Ravivarman
Mahinda-Samarasinghe

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று (புதன்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் துறைமுக அதிகாரசபை 110 கோடி இலாபம் ஈட்டியுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்து தொடர்பான தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் துறைமுகம் தொடர்பான நடவடிக்கைகளில் பாரிய வளர்ச்சியடைந்துள்ளதாகவும், திருகோணமலை துறைமுகத்தை சுற்றுலாத்துறையுடன் இணைத்துச் செயற்படுத்தினால் சுற்றலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg