Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈழ சினிமா கலைஞர்களிடம் ஒன்றுமையில்லை: நடிகர் ‘கயல்’ வின்சென்ட்

In
Updated: 08:25 GMT, Nov 29, 2017 | Published: 08:25 GMT, Nov 29, 2017 |
0 Comments
1327
This post was written by : Varothayan

இலங்கையில் தமிழ் சினிமா தயாரிப்புக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களிடம் ஒற்றுமையில்லை. எல்லோரும் இணைந்து நல்ல படைப்புக்களை கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லை என நடிகர் ‘கயல்’ வின்சென்ட் தெரிவித்துள்ளார்.

நோர்வே நாட்டைச்சேர்ந்த புலம்பெயர் தமிழரான வின்சென்ட் நகுல், பிரபு சாலமனின் ‘கயல்’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘நெருப்புடா’, ‘சீமைத்துரை’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் அண்மையில் தனது தாய்நாட்டுக்கு வருகை தந்தபோது, இலங்கையில் சினிமா தயாரிப்புக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கலைஞர்கள் பலரைச் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன் கண்ணோட்டத்திலேயே மேற்படி கருத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஆதவன் தொலைக்காட்சியின் ‘விதைகள்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் வின்சென்ட் இந்தக் கருத்துக்களை கூறினார். எம் கலைஞர்கள் ஒற்றுமையாக செயற்பட்டால், இலங்கையிலும் தமிழ் சினிமா விரைவாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg