Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனிதக் கடத்தலை முறியடிக்க ஐ.நா.வுக்கு பிரான்ஸ் வலியுறுத்து

In ஐரோப்பா
Updated: 08:07 GMT, Nov 29, 2017 | Published: 08:07 GMT, Nov 29, 2017 |
0 Comments
1231
This post was written by : Suganthini

லிபியாவூடாக இடம்பெறும் மனிதக் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்க ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டுமென, பிரான்ஸ் கோரியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோதே, ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர்  ஃபிரான்சுவா டெலட்ரி    (FRANCOIS DELATTRE) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சக் கோரிக்கையை முன்வைத்து லிபியாவூடாக மனிதக் கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நடவடிக்கையை முறியடிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும்’ என்றார்.

மேலும், ‘லிபியாவூடாக முன்னெடுக்கப்படும் மனிதக் கடத்தல் நடவடிக்கைக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை சுவீடன் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு பிரான்ஸ் உதவும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg