Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமானங்களை தகர்ப்போம்: ஐ.எஸ்-இன் எச்சரிக்கை கடிதத்தினால் மும்பையில் பரபரப்பு

In இந்தியா
Updated: 04:59 GMT, Nov 30, 2017 | Published: 04:59 GMT, Nov 30, 2017 |
0 Comments
1770
This post was written by : Risha

இந்திய குடியரசு தினத்தில் சரக்கு விமானங்கள் தகர்க்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டு, ஐ.எஸ். இயக்கத்தின் பெயரில் எழுதப்பட்ட கடிதமொன்று மும்பை விமான நிலையத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தின் கழிப்பறையிலிருந்து நேற்று (புதன்கிழமை) குறித்த கடிதம் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், அடுத்த ஆண்டு குடியரசு தினத்தில் சரக்கு விமானங்கள் தகர்க்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சில மணி நேரங்களுக்கு பதற்றம் நீடித்துள்ளது.

சோதனையின் போது சந்தேகத்திற்கிடனமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், அது போலி மிரட்டல் கடிதமாக இருக்கும் என மத்திய தொழிற்பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg