Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈராக்குக்கு பிரித்தானியா நிதியுதவி

In
Published: 06:42 GMT, Nov 30, 2017 |
0 Comments
1208
This post was written by : Suganthini

ஈராக்குக்கு 50 மில்லியன் பவுண்ட் நிதியுதவி வழங்க, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே முன்வந்துள்ளார்.

ஈராக்குக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபாடியை (Haider al-Abadi), பக்தாத்தில் நேற்று (புதன்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போதே, ஈராக்கின் நலனை கவனத்திற்கொண்டு நிதியுதவி வழங்க பிரதமர் தெரேசா மே முன்வந்துள்ளார்.

ஈராக்கின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக 30 மில்லியன் பவுண்ட் நிதியுதவியும் மனித உரிமை நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக 20 மில்லியன் பவுண்ட் நிதியுதவியும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஐக்கியப்பட்ட ஈராக்கை காண விரும்புவதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே கூறியதாக, ஈராக் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரு நாட்டுப் பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பின்போது, ஈராக்கில் பிரித்தானியா முதலீடுகளைச் செய்வதற்கும் பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg