Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீது மேலதிக பொருளாதாரத்தடை விதிக்க பிரான்ஸ் கோரிக்கை

In உலகம்
Published: 07:26 GMT, Nov 30, 2017 |
0 Comments
1218
This post was written by : Suganthini

வடகொரியா அணுவாயுதம் மற்றும் ஏவுகணைத்திறன்களை வளர்த்துவரும் நிலையில், அந்நாட்டுக்கு எதிராக மேலதிக பொருளாதாரத்தடை விதிக்க முன்வர வேண்டுமென, ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர் ஃபிரான்சுவா டெலட்ரே (Francois Delattre) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றபோதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியா தற்போது நடத்தியுள்ள ஏவுகணைச் சோதனைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் ஏனைய அதிகாரிகளும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், வடகொரியா மீது மேலதிக பொருளாதாரத்தடைக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்’ என்றார்.

‘வடகொரியாவால் விடுக்கப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலைக்கு மத்தியில், வடகொரியாவுக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலமே, தீர்வைக் காண முடியும். எனவே, அந்நாட்டின் மீது மேலதிக பொருளாதாரத்தடை விதிக்க முன்வர வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடகொரியா மிகவும் சக்திவாய்ந்த புதிய வகையான ஏவுகணைச் சோதனையை மீண்டும் நேற்று நடத்தியுள்ளதுடன், இந்த ஏவுகணை அமெரிக்காவை சென்று தாக்கும் வல்லமை கொண்டதெனவும் அறிவித்துள்ளது. இதனையடுத்தே, வடகொரியா மீது மேலதிக பொருளாதாரத்தடைக்கு ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg