Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்நாடகாவின் பேசுபொருளாக மாறியுள்ள ஒன்றரை வயது குழந்தையின் நட்பு

In இந்தியா
Published: 09:08 GMT, Nov 30, 2017 |
0 Comments
1955
icon_com
This post was written by : Risha

மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான உறவின் தனித்துவத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில், குறுநடை போடும் குழந்தைக்கும் குரங்குகளுக்கும் இடையிலான நட்பு இந்திய கர்நாடகா மாநிலத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஒன்றரை வயதுடைய சமர்த் (Samarth), தனது விளையாட்டு தோழர்களாக லங்கூர் இன குரங்குகளை தேர்ந்தெடுத்துள்ளார்.

லங்கூர் இன குரங்குகளானது, வழமையாக மனிதர்களிடத்திலிருந்து விலகியே இருக்கும். ஆனால், கர்நாடாகா மாநிலத்தின் ஹப்லி நகரில் இக்குரங்கினம் இந்த குழந்தையுடன் கூடிய விளையாடும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தைக்கும், குரங்குகளுக்கும் இடையிலான நட்பானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த குழந்தை வீட்டின் வெளியே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த குரங்குகள் குழந்தையிடமிருந்து ரொட்டியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளது. அதிலிருந்து குரங்குகள் வர ஆரம்பித்துள்ள அதேவேளை, குரங்குகளுக்கும்- குழந்தைக்கும் இடையே நட்பும் துளிர்விட்டுள்ளது.

குரங்குகளுடனான நட்பு குறித்து குழந்தையின் பெற்றோர் எச்சரித்துள்ள போதிலும், இவர்களுக்கிடையிலான நட்பு தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg