Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை: 20 ஆயிரம் பேர்வரை பாதிப்பு

In இலங்கை
Published: 02:54 GMT, Dec 1, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Risha

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக சுமார் 20 ஆயிரம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலையின் காரணமாக ஏழு பேர் உயிரிழந்ததுடன், 25 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் நாடுமுழுவதும் 4 ஆயிரத்து 886 குடும்பங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் ஆயிரம் பேர்வரையானோர் பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரண உதவிகளை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையங்கள், அவசர உதவிப் பிரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, பதுளை, ரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை காரணமாக சுமார் 600 பேர், பாதுகாப்பு நோக்கத்திற்காக மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg