Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்ஜென்டினா நீர்மூழ்கிக்கப்பலைத் தேடும் பணி கைவிடப்பட்டதாக அறிவிப்பு

In உலகம்
Published: 04:00 GMT, Dec 1, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Suganthini

44 பேருடன் காணாமல் போன ஆர்ஜென்டினா கடற்படையினருக்குச் சொந்தமான நீர்மூழ்கிக்கப்பலைத் தேடும் நடவடிக்கை கைவிட்டுள்ளதாக, கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

ஆர்ஜென்டினா கடற்படையினருக்குச் சொந்தமான சன் குவான் எனும் நீர்மூழ்கிக்கப்பல், தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த நொவம்பர் மாதம் 15ஆம் திகதி திடீரென்று காணாமல் போயிருந்தது.

காணாமல் போன கப்பலை கடந்த இரண்டு வாரங்களாகத் தேடி வந்தபோதும், அக்கப்பல் தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கப்பலைத் தேடும் நடவடிக்கையை கைவிட்டுள்ளதாகவும், கடற்படையினர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளனர்.

இந்தக் கப்பலைத் தேடுவதற்காக கடுமையான முயற்சி எடுக்கப்பட்டபோதிலும், அது பலனளிக்கவில்லையெனவும், கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக கப்பல் இருந்த இடத்துக்கு அருகில் வெடிப்பு இடம்பெற்றிருக்கலாமென்று சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, கப்பலிருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கையும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg