Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனா ஜனாதிபதியைச் சந்தித்தார் ஒபாமா

In
Updated: 04:15 GMT, Dec 1, 2017 | Published: 04:15 GMT, Dec 1, 2017 |
0 Comments
1145
This post was written by : JudeDanish

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்ஙை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு பிஜிங் நகரில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாக சீன தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக சீன தேசிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் சீன-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்கு சீன ஜனாதிபதி பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவு, பரிமாற்றங்கள், ஒத்துழைப்புக்களுக்கு சாதகமான பாத்திரத்தை வகிப்பதாக ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சீனாவில் இடம்பெறவுள்ள உலக கல்வி மாநாட்டில் ஒபாமா விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg