Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உக்ரைனில் கிரேனைட் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு

In
Published: 04:31 GMT, Dec 1, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Suganthini

உக்ரைனின் நிகோபோல் (Nikopol) நகரில் இடம்பெற்ற கிரேனைட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிகோபோல் நகரில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இரண்டு கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவ்விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவர்களின்  தந்தை ஆத்திரமடைந்து இரண்டு கிரேனைட் தாக்குதல்களை நடத்தியுள்ளார்.

இதன்போது, கிரேனைட் தாக்குதலை நடத்தியவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், படுகாயமடைந்தவர்களில் 3 சந்தேக நபர்களும் அடங்குவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)