Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ஆவா’ குழுவிற்கு சுவிஸ் நாட்டில் இருந்து நிதி!

In இலங்கை
Published: 04:52 GMT, Dec 1, 2017 |
0 Comments
1448
icon_com
This post was written by : Ravivarman

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ஆவா குழுவின் முக்கிய செயற்பட்டாளர்கள் தொடர்பில் தமக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அக்குழுவிற்கு சுவிஸ் நாட்டில் இருந்து நிதியுதவிகள் கிடைத்து வருவதாகவும் யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து யாழ்ப்பாணப் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,’யாழில் கடந்த காலத்தில் ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா தற்போது சுவிஸ் நாட்டில் கோரி இருப்பதாகவும், அவருடன் சுவிஸில் சேர்ந்து இயங்கும் சிலரே யாழில் இயங்கும் ஆவா குழுவுக்கு பண உதவிகளைச் செய்து வருகின்றனர் என இரகசிய தகவல்கள் மூலம் அறிந்துள்ளோம்.

அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு சுவிஸில் இருந்து குறித்த நபர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

இதேவேளை ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களான தேவா, பிரகாஸ் மற்றும் டானியல் ஆகிய மூவர் இந்தியாவில் திருச்சிப் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நடமாடினார்கள் என திருச்சி கியூ பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களையும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg