Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லட்சத்தீவை நோக்கி தீவிரமடையும் ஓஹி புயல்

In இந்தியா
Published: 05:27 GMT, Dec 1, 2017 |
0 Comments
1536
icon_com
This post was written by : Risha

கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஓஹி புயல், தற்போது தீவிரமடைந்து லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓஹி புயலானது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) பாரிய சேதத்தை ஏற்படுத்தியதுடன், நால்வரின் உயிரையும் காவுக்கொண்டிருந்தது.

மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் பெய்த அடை மழையினால் மரங்கள் வேரோடு சரிந்ததில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.

ஓஹி புயலின் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓக்கி புயல் மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg