Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உ.பி. தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்- பா.ஜ.க. முன்னிலை

In இந்தியா
Updated: 06:15 GMT, Dec 1, 2017 | Published: 06:15 GMT, Dec 1, 2017 |
0 Comments
1181
This post was written by : Risha

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூன்று கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில், இதுவரையான முடிவுகளின்படி பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதற்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, உத்தர பிரதேசத்தில் கடந்த 22, 24 மற்றும் 29 ஆகிய திகதிகளில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 52.59 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 49.3 சதவீதம் வாக்குகளும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 53 சதவீதம் வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg