Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் சேதுபதியின் படத்திலிருந்து விலகும் ஏ.ஆர் ரஹ்மான்!

In சினிமா
Updated: 05:49 GMT, Dec 1, 2017 | Published: 05:48 GMT, Dec 1, 2017 |
0 Comments
1300
icon_com
This post was written by : Elakkiya
21081447_1438766429544018_349215995_o-1024x1024

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் விஜய் சேதுபதி தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில் இருந்து ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும், ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், ராஜசேகர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சுமார் 150 கோடி ரூபாய் நிதியில் தயாராகும் இத்திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். படத்தின் பூஜை அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. பூஜை ஆரம்பமாகி படப்பிடிப்பு தொடங்காத நிலையில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரவிவர்மன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஆர். ரத்னவேலு தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானும் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg