Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுன்னாகம் பொலிஸாரினால் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

In இலங்கை
Updated: 15:33 GMT, Dec 1, 2017 | Published: 06:33 GMT, Dec 1, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Ravivarman
human-rights

இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதி கேட்ட போது, தனது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சாவை வைத்து தன்னை அச்சுறுத்தியதாக யாழ்.வர்த்தகர் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (வியாழக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் மாவீரர் நாளான கடந்த 27ஆம் திகதி இளைஞர்கள் மீது சுன்னாகம் பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதன்போது அருகில் வர்த்தக நிலையத்தில் இருந்த வர்த்தகர் இதனை அவதானித்து, சம்பவ இடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று பொலிஸாரிடம் இளைஞர்கள் மீது எதற்காக தாக்குதலை மேற்கொண்டீர்கள்? என நியாயம் கேட்டுள்ளார்.

அதன்போது பொலிஸார் குறித்த வர்த்தகரைத் தகாத வார்த்தைகளால் பேசி அவரையும் தாக்கியுள்ளனர். அதனால் வர்த்தகர் தனது மோட்டர் சைக்கிளை அவ்விடத்தில் கைவிட்டு விட்டுத் தப்பியோடியுள்ளார்.

அதன் பின்னர் சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடி மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்தில் இருந்து மீட்கச் சட்டத்தரணியுடன் சென்ற வேளை வர்த்தகரின் மோட்டார் சைக்கிளில் இருந்து 200 கிராம் கஞ்சாவை மீட்டு உள்ளோம் எனப் பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.

இதனால் இது தொடர்பில் குறித்த வர்த்தகர் மனித உரிமை ஆணைக்குழுவில் தனக்கு எதிராக சுன்னாகம் பொலிஸார் பொய்க்குற்றச் சாட்டினை முன் வைத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)