Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘விஸ்வரூபம்-2′ – இராணுவ சீருடையில் கமல்ஹாசன்

In சினிமா
Updated: 06:53 GMT, Dec 1, 2017 | Published: 06:53 GMT, Dec 1, 2017 |
0 Comments
1204
icon_com
This post was written by : Elakkiya
201712010837058518_Army-dressed-Kamal-trends-in-social-media_SECVPF

விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு ஆரம்மாகியுள்ள நிலையில் இராணுவ சீருடையில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த ஒளிப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

குறித்த ஒளிப்படத்துடன், தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், கடைசி கட்டத்தில் ‘விஸ்வரூபம்-2′. சென்னை ஓ.டி.ஏ. இந்தியாவையும், தன்னையும் பெருமைப்படுத்துகிறது. இந்தியாவிலேயே இங்கு மாததிரமே பெண்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகிய விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் 90 சதவீத காட்சிகள் முதல்பாக படப்பிடிப்பின்போதே தயாராகியது. எனினும் மீதமுள்ள காட்சிகளை படமாக்குவதில் சர்ச்சை ஏற்பட்டதால் சிறிதுகாலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

எனினும் தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு சென்னை ஓ.டி.ஏ இராணுவ முகாமில் படப்பிடிப்பு இடம்பெற்றுவருகின்றது.

‘விஸ்வரூபம்-2′ டிரைலர் இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகும் ‘விஸ்வரூபம்-2′ திரைப்படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)