Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு (2ஆம் இணைப்பு)

In
Published: 06:15 GMT, Dec 1, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Suganthini

பாகிஸ்தானின் பெஷாவார் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களே, துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.  சுமார் 2 மணித்தியாலங்களாக இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிதாரிகளையும் சுட்டுக் கொன்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் அமைப்பினர், ராணுவத்தின் புலனாய்வு நிலையத்தை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் பெஷாவார் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் கடுமையான துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுவரும் நிலையில், படுகாயமடைந்துள்ள 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெஷாவாரிலுள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியினுள் மாறுவேடத்தில் துப்பாக்கிதாரிகள் இருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென்று நுழைந்ததாகவும் இவர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தி வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், பல்கலைக்கழகத்தை பொலிஸாரும் ராணுவத்தினரும் முற்றுகையிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)