Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம்: தினகரன்

In இந்தியா
Updated: 07:06 GMT, Dec 1, 2017 | Published: 06:32 GMT, Dec 1, 2017 |
0 Comments
1084
icon_com
This post was written by : Risha
dina

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஆர்.கே நகர் தொகுதி மக்கள் உதவியுடன் இரட்டை இலையை மீட்போம் என டி.டி.வி. தினகரன் சூளுரைத்துள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

அதற்கு முன்னர் இன்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலும் அண்ணா எம்ஜிஆர் நினைவிடத்திலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஆர்.கே நகர் தொகுதி மக்கள் உதவியுடன் இரட்டை இலையை மீட்போம். ஆர்.கே.நகர் தொகுதியில் எனக்கும் தி.மு.க வேட்பாளருக்கும் தான் போட்டி. எதிரிகளையும் துரோகிகளையும் வென்றெடுத்து இரட்டை இலையை மீட்டெடுப்போம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg