Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹேரத்தின் இடத்தினை ஜெப்ரி வெண்டர்சே நிரப்புவாரா?

In கிாிக்கட்
Updated: 17:20 GMT, Dec 1, 2017 | Published: 06:53 GMT, Dec 1, 2017 |
0 Comments
1514
This post was written by : Sujitharan

இலங்கை கிரிக்கட் அணியின் நம்பிக்கைக்குரிய வீரரும், அனுபவ சுழற்பந்து வீச்சாளருமான ரங்கன ஹேரத், இந்திய அணிக்கெதிரான மூன்றாது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

இவருக்கு பதிலாக, மற்றொரு வலது கை சுழல் வீரரான ஜெப்ரி வெண்டர்சே இலங்கை அணியில் இணைந்து கொண்டுள்ளார். இதற்காக இலங்கையிலிருந்து அவர் இந்தியா நோக்கிப் பயணித்துள்ளார்.

ரங்கன ஹேரத்திற்குள்ள தொடர்ச்சியான முதுகு வலி காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜெப்ரி வெண்டர்சேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது ஜெப்ரி வெண்டர்சேவின் அறிமுகப் டெஸ்ட் போட்டியாக அமையவுள்ள நிலையில், ஹேரத்தின் இடத்தினை அவர் நிரப்புவாரா? என, கேள்வி இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

27 வயதான ஜெப்ரி வெண்டர்சே இதுவரை 11 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 7 ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன், 36 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 24.87 என்ற சராசரியுடன் 168 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg