Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலவாக்கலையில் பேரூந்து – மோட்டர் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

In இலங்கை
Published: 07:00 GMT, Dec 1, 2017 |
0 Comments
1237
icon_com
This post was written by : Ravivarman

தலவாக்கலையில், பேரூந்துடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 36 வயதுடைய புத்திக சமிந்த வடுவேகெதர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பகுதியிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்தும், புஸ்ஸல்லாவ பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளின் சாரதி வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த பேரூந்தில் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC00376 DSC00366 DSC00362

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)