Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி புயல் எதிரொலி: பாடசாலைகளுக்கு விடுமுறை

In இந்தியா
Updated: 07:02 GMT, Dec 1, 2017 | Published: 07:01 GMT, Dec 1, 2017 |
0 Comments
1063
icon_com
This post was written by : Risha
rain

‘ஓஹி’ புயலின் எதிரொலியாக பெய்துவரும் அடை மழை காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஓஹி புயலின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மழையானது எதிர்வரும் இரு தினங்களுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை புறநகர் பகுதியில் நேற்று கடும் மழை பெய்த நிலையில், சென்னையில் இன்று பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மழை காரணமாக மதுரை, தேனி, விழுப்புரம், நீலகிரி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg