Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் பெண் சுட்டுக்கொலை!

In இலங்கை
Published: 07:16 GMT, Dec 1, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Ravivarman
gun-shooting

கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (வியாழக்கிழமை) கொட்டாவை, பாலிகா வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்த இனந்தெரியாத இருவர் அப்பெண் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண்ணொருவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார், கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg