Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ப.சிதம்பரத்தின் உறவினர்கள் வீடுகளில் அதிரடி சோதனை

In இந்தியா
Updated: 07:23 GMT, Dec 1, 2017 | Published: 07:19 GMT, Dec 1, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Risha
sithambaram

ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர்கள் வீடுகளில் அமுலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

உறவினர்களின் வீடுகளில் அமுலாக்கத்துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேக்சிஸின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்ததாகவும் அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்ட விரோதமாக அனுமதி அளித்ததாகவும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு துறை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது.

மேலும், விதிமுறைகளின்படி சுமார் 600 கோடிக்கு மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டுக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க வேண்டும். அப்படியிருக்கும்போது ரூ.5 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீட்டுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியிருப்பது குறித்தும் மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமுலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட ஆறு இடங்களில் சோதனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)