Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனத்த இதயத்தோடு கிரிக்கட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஜ்மல்

In கிாிக்கட்
Updated: 07:45 GMT, Dec 1, 2017 | Published: 07:45 GMT, Dec 1, 2017 |
0 Comments
3183
This post was written by : Sujitharan

உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக உச்சம் தொட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், சகலவிதமான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

முன்னதாக சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், 40 வயதான அவர், நேற்றைய தினம் லாகூர் அணிக்கெதிரான ரி-20 போட்டியுடன், சகலவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுக் கொண்டுள்ளார்.

சர்சைக்குரிய பந்துவீச்சு முறை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இவர் ஓரங்கட்டப்பட்ட நிலையில், நேற்றுடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் விடைகொடுத்துள்ளார்.

பாகிஸ்தான அணிக்காக சிறப்பாக பந்து வீசிய இவரது பந்து வீச்சு முறையில் சந்தேகம் எழுந்ததால், இவரது வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.

2009-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டுகளில், இவர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டதுடன், ஐ.சி.சி. அவருக்கு பந்து வீச தடைவிதித்தது.

அப்போது ஒருநாள் கிரக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இவர் முதலிடத்திலிருந்தார். அதுமாத்திரமல்லாது டெஸ்ட், ரி-20 கிரிக்கெட் தரவரிசையில் முதல்ட 10 இடத்திற்குள் தரப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், பந்து வீச்சு தடையினால், உச்சத்திலிருந்த அவரது கிரிக்கட் வாழ்வு வீழ்ச்சி காணத் தொடங்கியது.

அன்றிலிருந்து, இவருக்கு பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட, இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். இறுதியாக பைசலாபாத் அணிக்காக விளையாடி வந்த இவர், நேற்றுடன் அதிலிருந்தும் ஓய்வு பெற்றுக் கொண்டார்.

ஓய்வின் போது, கருத்துரைத்த இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தனது கிரிக்கட் வளர்ச்சிக்காக  ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தாலும், தனது தடைக்கெதிராக  எதுவித நடவடிக்கையையும் எடுக்கத் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தினார்.

அதுமாத்திரமல்லாது, தான் கனத்த இதயத்தோடு ஓய்வு பெறுவதாகவும், ஐ.சி.சி.யின் நெறிமுறை மிகவும் கடுமையாக இருப்பதாவும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி தற்போது, விளையாடிக் கொண்டிருக்கும் அனைத்து வீரர்களையும் சோதனைக்கு உட்படுத்தினால், 90 சதவீத வீரர்கள் தோல்வியடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg