Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானின் அணு ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்போம் – தெரேசா மே

In
Updated: 10:10 GMT, Dec 1, 2017 | Published: 07:48 GMT, Dec 1, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Suganthini
may

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பதாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

ஜோர்டானுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தெரேசா மே, ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே,  இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுக்கும் 6 நாடுகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்துக்கு எமது ஆதரவை வழங்குவோம்’ என்றார்.

‘ஈரானின் அணுசக்தித்திட்ட நடவடிக்கையானது, ராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாதென்பதும் உறுப்படுத்தப்பட்டுள்ளது’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்திருந்ததுடன், ஈரானுடன் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டமை அமெரிக்காவின் வரலாற்றில் மோசமானதொரு சம்பவமெனவும் விமர்சித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)