Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஞ்சனா-3 படத்தில் ஓவியா இல்லையா?- படக்குழு விளக்கம்

In சினிமா
Updated: 08:56 GMT, Dec 1, 2017 | Published: 08:56 GMT, Dec 1, 2017 |
0 Comments
1397
icon_com
This post was written by : Elakkiya
60891104

காஞ்சனா-3 படக்குழுவிலிருந்து நடிகை ஓவியா விலகியுள்ளதாக வெளியாகும் தகவல்களை படக்குழு மறுத்துள்ளது.

இது தொடர்பாக காஞ்சனா-3 படக்குழுவினர் தெரிவிக்கையில், ‘காஞ்சனா-3′ படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் ராகவா லோரன்சுடன் ஓவியா நடித்து வருகிறார். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஓவியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எதற்காக இப்படியான வதந்தியை பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பொஸ் நிகழ்ச்சி ஊடாக பிரபலமாகிய ஓவியா தற்போது கடைதிறப்பு, விளம்பர நிகழ்ச்சிகள் என பரபரப்பாக உள்ளார். ஒருபுறம் பட வாய்ப்புக்களும் குவிந்துள்ளன.

இவ்வாறே ராகவா லோரன்ஸ் இயக்கி நடித்துவரும் காஞ்சனா-3 திரைப்படத்தில் ஒப்பந்தமாகிய ஓவியா, படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இத்தகைய தகவல்கள் யாவும் பொய்யானவை என படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)