Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசு மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை: ஸ்டாலின் சாடல்

In இந்தியா
Updated: 08:04 GMT, Dec 1, 2017 | Published: 08:04 GMT, Dec 1, 2017 |
0 Comments
1208
This post was written by : Risha

‘ஓஹி’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் மத்திய அரசு அக்கறையின்றி செயற்படுவதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

‘ஓஹி’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”ஓஹி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக அதிகரித்துள்ளது. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மத்திய அரசு தவறியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அக்கறை செலுத்தவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளிலும் ஈடுபட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg