Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி புயல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

In இந்தியா
Updated: 08:29 GMT, Dec 1, 2017 | Published: 08:28 GMT, Dec 1, 2017 |
0 Comments
1281
This post was written by : Risha

ஓஹி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசின் நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபா நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஓஹி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போதே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சுழற்றியெடுத்த புயல் காற்றில் சிக்கி இதுவரை ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கே இந்த நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓஹி புயலின் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்துமாறு மூத்த அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் முதலமைச்சர் இதன்போது தெரிவித்துக் கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg