Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை

In
Updated: 08:37 GMT, Dec 1, 2017 | Published: 08:34 GMT, Dec 1, 2017 |
0 Comments
1059
icon_com
This post was written by : Suganthini
ger

ஜேர்மனியில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு முடிவு கட்டும் முயற்சியாக, முன்னாள் மைய இடதுசாரிக் கட்சிப் பங்காளர்களை சந்தித்துக் கலந்துரையாட பிரதமர் அங்கேலா மெர்கல் எதிர்பார்த்துள்ளார்.

ஜேர்மனியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கலந்துரையாடலில், சமூக ஜனநாயக கட்சித் தலைவர் மார்ட்டின்  ஷூல்ஸ்    (Martin Schulz)     கலந்துகொள்ளவுள்ளார்.

ஜேர்மனியில் கடந்த செப்டெம்பர்  மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், அதிபர் அங்கேலா மெர்கலின் ஜெர்மனிய கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி போதியளவான பெரும்பான்மையைப் பெறவில்லை.

இதன் காரணமாக, ஜேர்மனியில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் சி.டி.யூ/சி.எஸ்.யூ மற்றும் கிறீன்ஸ், எப்.டி.பி ஆகிய கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து எப்.டி.பி கட்சி விலகியதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து, ஜேர்மனியில் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg