Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் களம் சூடு பிடித்தது: மதுசூதனன் வேட்புமனு தாக்கல்

In இந்தியா
Updated: 08:45 GMT, Dec 1, 2017 | Published: 08:45 GMT, Dec 1, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Risha
madu

ஜெயலலிதா மறைவையடுத்து வெற்றிடமான ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள, அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டி.டி.வி. தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg