Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்த முன்னெச்சரிக்கைகளை தமிழ் மொழியில் விடுக்க முடியாதுள்ளது: பிரேமலால்!

In இலங்கை
Updated: 11:27 GMT, Dec 1, 2017 | Published: 09:14 GMT, Dec 1, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Ravivarman
met-srilanka

வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகள் இன்மையால் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கைகளை தமிழ் மொழியில் வழங்க முடியாதுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கைகள் வெளியிடப்பட்ட போதும் தமிழ்மொழி மூலம் தொடர்ந்து வழங்க முடியாதுள்ளது.

இந்நிலைமைக்கு தமிழ் தெரிந்த அதிகாரிகள் இல்லாமையே காரணம் என்பதுடன், குறித்த வெற்றிடத்திற்கு நான்குபேர் தேவைப்படும் நிலையில், தற்போது எமது திணைக்களத்திற்கு ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை.

குறித்த நியமனங்களை அரசாங்கம் பெற்றுத் தந்தால் எதிர்காலத்தில் மூன்று மொழிகளிலும் தகவல்களை வழங்குவதுடன், மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்யவும் முடியும்” என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமலால் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)