Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகிழ்ச்சியின் உச்சம்! இந்திய வீரர்களின் ஊதியத்தை உயர்துகிறது இந்திய கிரிக்கட் சபை

In கிாிக்கட்
Published: 08:59 GMT, Dec 1, 2017 |
0 Comments
1547
icon_com
This post was written by : Sujitharan
india-vs-australia-test-match-in-dharamsala_a60cc8ea-204f-11e7-beb7-f1cbdf0743d8

தன் தாய் நாட்டிற்காக தொடர் வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை, இந்திய கிரிக்கட் சபையின் நிர்வாகக் குழு வழங்கியுள்ளது.

இந்திய கிரிக்கட் வீரர்களின் ஊதியத்தினை அதிகரிக்க, நிர்வாகக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் ஏ, பி, சி என மூன்று தரத்தில் பிரிக்கப்பட்டு, அதற்கமைய அவர்களுக்கான ஊதியங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய மதிப்பில் ‘ஏ’ தரத்திலுள்ளவர்களுக்கு, ஆண்டுக்கு 2 கோடியும், ‘பி’ தரத்திலுள்ளவர்களுக்கு, 1 கோடியும், ‘சி’ பிரிவில் உள்ளடங்கும் வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.

வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அத தற்போது புதுப்பிக்கப்படவுள்ளது. இந்த தொகைக்கு அப்பால், ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும், ஒரு நாள் போட்டிக்கு 6 லட்சமும், ரி-ருவென்ரி போட்டிக்கு, 3 லட்சமும் வீரர்களுக்கு போட்டி கட்டணமாக வழங்கப்படுகிறது.

இது போட்டியில் பங்குபற்றும் வீரர்களுக்கானாகும், அதேபோல் அணிக்கு தேர்வாகி களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு அந்த தொகையில் பாதியளவு போட்டிக் கட்டணமாக கிடைக்கும்.

இந்திய அணியின் தொடர் வெற்றிகளினால், இந்திய கிரிக்கட் சபையின் வருமனமும் அதிகரித்துள்ளது.

இதனால் தங்களது ஊதியத்தையும் உயர்த்தி தர வேண்டும் என்று இந்திய வீரர்கள் தரப்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கு இந்திய கிரிக்கட் சபை தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், அந்த ஊதியத் தொகை எவ்வளவு என்ற விடயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg