Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோல்வியை தவிர்க்குமா இலங்கை? நாளை மோதல்

In கிாிக்கட்
Published: 09:03 GMT, Dec 1, 2017 |
0 Comments
1327
icon_com
This post was written by : Anojkiyan
dik

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

டெல்லி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமைதாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடும். இந்திய அணி தொடரை வெற்றிபெறவும், இலங்கை அணி தொடரை சமநிலை செய்யவும் தீவிரம் காட்டும்.

இந்திய அணியை பொறுத்தவரை அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அணியின் ரங்கன ஹேரத் இல்லாதது அணியிக்கு பாரிய இழப்பாக கருதப்படுகின்றது. அவருக்கு பதிலாக ஜெஃப்ரி வெண்டசே அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல கடந்த போட்டிகளில் சோபிக்காத சதீரசாமரவிக்ரம அணியிலிருந்து நீக்கப்பட்டு தனஞ்சய டி சில்வாவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)