Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் இரசாயனத் தொழிற்சாலையில் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு

In உலகம்
Published: 09:03 GMT, Dec 1, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Suganthini

ஜப்பானின் புஜி நகரில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலையொன்றில் வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ள  நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி தொழிற்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அத்தொழிற்சாலையைச் சூழ பாரிய புகைமூட்டம் காணப்படுவதாகவும், அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையை பொதுமக்கள் சுவாசிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால்,  இத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 100 மீற்றர்வரை தூரமுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg