Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் தமிழக மீனவர்கள்

In இந்தியா
Published: 10:07 GMT, Dec 1, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Risha

உரிய நேரத்தில் வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கவில்லை என தமிழக மீனவர்கள் அரசாங்கத்தை சாடியுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் தெற்கு கடற்கரை பகுதியிலுள்ள திருவனந்தபுரம் நகர் மீனவர்கள் காணாமல் போன நிலையில், அவர்களது உறவினர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்துள்ளனர்.

கடலோரத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி கேரளா மற்றும் தமிழ்நாடு கடலோர மாநிலங்களில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், நூறு பேர்வரை காணாமல் போனர். இந்நிலையில், இன்று கடற்கரை பகுதியில் கூடிய காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள், அவர்களை தேடித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவின் கொச்சி நகரிலும், தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடற்கரையிலும், இந்திய கடலோர காவல்துறையினரால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவின் தேசிய அனர்த்த நிவாரணப் படையினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

உலகிலேயே மிகவும் பேரழிவு ஏற்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகக் காணப்படுகிறது. நாட்டின் 1.32 பில்லியன் மக்கள் வெள்ளப்பெருக்கு, சூறாவளி மற்றும் வறட்சி போன்ற அனர்த்தங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg